புதுமலர் பிரபாகரன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.

Monday, December 17, 2012

தேவரின படுகொலை : அக்டோபர் 30 தேவர் குருபூஜை அன்று நடந்த இனப்படுகொலைகளைத் தொடர்ந்து தேவரின அமைப்புகள் அரசு மற்றும் ஊடக பயங்கரவாதங்களை கடந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பொய் வழக்கு :

தேவரினத்தவர் மீது பொய் வழக்கு தொடர்வது, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது ,
உள்ளரங்க நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது, ஊர்வலம், பேரணி, படத்திறப்பு என அனைத்து வகையிலும் அரசின் காவல்துறை மறைமுகமாகவும் நேரடியாகவும் முடக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இன படுகொலையை அடுத்து தேவரின மக்களிடம் எழுச்சி ஏற்பட்டு,ஒன்றுபட்ட தேவரினம் ஒரே தலைமையின் கீழ் இயங்கிவிடுமோ என்று அஞ்சிய அரசு உளவுத்துறை மூலம் தேவரின கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய பாதுகாப்பு சட்டமா? தேர்தல் பாதுகாப்புச் சட்டமா?

தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது தேசத்தின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை கைது செய்ய இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் நிற்ப்பதையும் , நடப்பதையும் காரணம் காட்டி தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.

ஏற்கனவே ஒரு பொய் வழக்கினை போட்டு சிறையடைக்கப்பட்ட திரு சண்முகையாபாண்டியன் அவர்களை சிறையில் இருக்கும்பொழுது ஏதோ தேசியம் பாதித்ததென்று கடலாடி நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக கூறி கடந்த டிசம்பர் 10 அன்று தேவர்குல கூட்டமைப்பின் தலைவர் திரு சண்முகையாபாண்டியன் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் திரு புதுமலர் பிரபாகரன் அவர்களை முதுகுளத்தூர் ஆலோசனைக் கூட்டத்தில் சர்ச்சையாக பேசியதாகக் கூறி வழக்கு பதிவு செய்து சிறை அடைத்திருந்தனர். இன்னும் சில தினங்களில் ஜாமீனில் வெளிவருவதாக எதிர்பார்த்த நிலையில் நேற்று திரு புதுமலர் பிரபாகரன் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் மறத்தமிழர் சேனையினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

                                                                                                                                                         courtsy-devartv