காரைக்காலில் கடந்த 2 நாள்களாக கடல் சீற்றம் நீடித்தது. பெரும்பாலான மீனவர்கள் சீற்றத்தைப் பொருள்படுத்தாமல் கடலுக்குள் சென்றனர். சிலர் சீற்றத்தை கருதி தொழிலுக்கு செல்லவில்லை.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடந்த 2 நாள்களாக காரைக்கால் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த சீற்றம், செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.
மாலை நேரத்தில் விசைப்படகுகளை இயக்கிக்கொண்டு கடலுக்குள் செல்வோர் அரசலாறு முகத்துவாரத்தின் மூலம் கடலுக்குள் செல்வதில் சிரமப்பட்டனர். தொடர்ந்து அலைகளின் நடுவே முன்னேறி கடலுக்குள் சென்றனர். செவ்வாய்க்கிழமை காலையில் பைபர் படகுகளைக்கொண்டு குறைந்த தூரம் கடலுக்கு செல்ல முற்பட்ட மீனவர்களுக்கு, கடல் சாதகமான நிலையில் இல்லாததை கண்டு தயங்கினர்.
மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலானோர் சீற்றத்தை பொருள்படுத்தாமல் கடலுக்குள் சென்றனர். சில மீனவர்கள் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்லவில்லையென மீனவவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.