திமுக ஊராட்சி தலைவர் கைது.

Thursday, December 20, 2012

கமுதி அருகே பேரையூர் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த ஆனையூர் பகுதி பரளையாற்றில் உடையநாதபுரத்தைச் சேர்ந்த முனியராஜ் (42) என்பவர் லாரியில் மணல் அள்ளி எடுத்துச் சென்றார்.

அப்போது திமுகவைச் சேர்ந்த மேலக்கன்னிச்சேரி ஊராட்சித் தலைவர் சசிவர்ணம் (55) மற்றும் அவர் தரப்பினர் ராமர், முத்துவேல், சத்யேந்திரன் ஆகியோர் லாரியை மறித்து நிறுத்தி, முனியராஜிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார் முனியராஜ். போலீஸார் வழக்கு பதிந்து சசிவர்ணத்தை கைது செய்தனர். தப்பியோடிய மற்ற மூவரை தேடி வருகின்றனர்.