எனது கட்சி தேவர்களுக்கான கட்சியில்லை- " தலித் சேதுராமன் ".

Saturday, December 8, 2012

இந்த வாரத்தில் வெளியான பிரபல வார இதழில் “தலித்” சேதுராமன் சில கருத்துக்களை பரிமாரிக்கொண்டுள்ளார். அந்த கருத்தில் மிக முக்கியமானவற்றை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

1 . பி சி ஆர் சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்
2 . பி சி ஆர் சட்டத்தை சரியாக அமல்படுத்தி நடவடிக்கை எடுக்கத் தவறும் கலெக்டரையும் , எஸ்.பி யையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

3 . யூனிவர்சிட்டியில் படித்து வாங்கிய பட்டங்களைவிட ” தலித் ” சேதுராமன் என்ற பட்டத்தை நினைகின்றேன்.
4 . மூ மு க ஜாதிக் கட்சியென்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. இது சேர சோழ பாண்டியர்களின் கட்சி.
5 . தலித்துக்களும் தேவர்களும் சேர்ந்து வாழவேண்டும். அதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.
தலித் சேதுராமனுக்கு சில கேள்விகள் :

1 . இது தேவர்களுக்கான கட்சியில்லை என்றால் உங்கள் கட்சியில் தேவர் என்று பெயருக்குப்பின்னால் போட்டுக் கொள்வோர்கள் எல்லாம் தேவருக்கு பதிலாக தலித் என்று வைத்துக் கொள்வார்களா ?

2 . தேவருக்கான கட்சியில்லை என்று கூறும் தலித் சேதுராமனின் கட்சியில் பொதுச்செயலளராக இருக்கும் மதிப்பிற்குரிய இசக்கிமுத்து அவர்களை இனிமேல் இசக்கிமுத்து தலித் என்று போட்டுக்கொள் தலித் சேது அறிவுருத்துவாரா?

3 . தலித் சேது கட்சி சேர சோழ பாண்டியர்களின் கட்சியென கூறிவிட்ட நிலையில் சேர சோழ பாண்டியர்கள் யாரென்றும் உங்கள் திருவாயை மலர்ந்து விடுங்கள்.

                                                                                                                                           courtst-devartv