சென்னை பெருங்குடியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியாகினர்.
இன்று காலை 8 மணியளவில் திருப்போரூரில் இருந்து தியாகராயர் நகர் நோக்கி தடம் எண்519 கொண்ட பேருந்தின் படிகட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.அப்போது மாநகரப் பேருந்து ஓட்டுநர் திடீர் என்று பிரேக் பிடிக்க படியில் தொங்கிய மாணவர்கள் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பேருந்தை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த லாரி, சாலையில் தவறி விழுந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் 8 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த மணவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் லைஃப்லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் மாணவர்களில் 4 பேர் இறந்து விட்டதாக அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கிண்டி புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் கழுத்தில் இருந்த அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார் பள்ளிக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், சைக்கிளில் பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி சரண்யா மீது அரசு பேருந்து மோதியதில் அவர் பலியாகியுள்ளார்.