த‌ர்மபுரி கலவர பின்னணியில் ராமதாஸ் -காடுவெட்டி குரு : சரிநிகர் முற்போக்கு இயக்கம்

Saturday, December 8, 2012

த‌ர்மபுரி கலவரத்தின் பின்னணியில் பா.ம.க நிறுவனர் ராமதாசும், அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் காடுவெட்டி குருவும் இருப்பதாக குற்றச்சா‌ற்று எழுந்துள்ளது.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் சரிநிகர் முற்போக்கு திருமண இயக்கத்தினர் சார்பில் சென்னையில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதி மறுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில், கடந்த மாதம் 7ஆம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற சாதி கலவரத்திற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸும், பாம.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் காடுவெட்டி குருவும் தான் காரணம் என்று குற்றம் சா‌ற்றப்பட்டது.

அவர்கள் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த‌ர்மபுரியில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு முழுமையான நிவாரணம் வழங்க கோரியும், தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.