அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற ஒருவார காலமே இருக்கும் நிலையில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் பலம் அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹரி அமீன் இன்று அக்கட்சியில் ஐக்கியமாகி இருக்கிறார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜகதான் ஆட்சியைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நர்ஹரி அமீன் இன்று முதல்வர் மோடியை நேரில் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்.
குஜராத்தின் பட்டேல் சமூகத்தை சேர்ந்த கேசுபாய் பட்டேல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கிவிட்ட கவலையில் இருந்த பாஜகவுக்கு அதே பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த நர்ஹரி அமீனின் வருகை கூடுதல் பலம்தான்! காங்கிரஸ் கட்சியோ செம சோகத்தில் கன்னத்தில் " கை " வைத்துவிட்டது!
குஜராத் மாநில சட்டசபைக்கு வரும் 13, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 20- தேதி நடைபெற இருக்கிறது.