ஜப்பானில் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை .

Friday, December 7, 2012

ஜப்பான் வடகிழக்கு பகுதியில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹோன்ஷுவுக்கு கிழக்கே கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 36.1 கிமீ ஆழகத்தில் இது ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 2011இ-இல் உலகை உலுக்கிய ஜப்பானிய சுனாமியில் பயங்கர சேதமடைந்த மியாகி கடலோரப்பகுதியில் ஒரு மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் பின்னதிர்வாக 6.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டோக்கியோவுக்கு 450 கிமீ தொலைவில் பூகம்ப மையம் இருந்தாலும் டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கியதாஅக தக்வல்கள் தெரிவிக்கின்றன.

ஐவேட், புகுஷிமா, ஆமோரி, இபாராகி பிரிஃபெக்சர் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டத்தட்டுக்கள் கிடைகோட்டு திசையில் நகர்ந்துள்ளதால் இதனால் மிகப்பெரிய சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இது சிறிய அளவிலான சுனாமியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற படி சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை.