கரூர்: நில அபகரிப்பு வழக்கில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்கக் கோரிய மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கரூர், வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தெய்வானை தம்பதியினரின் தத்துப்பிள்ளை கோகுல்(25). அவர் கோவையில் உள்ள ஒரு கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார். கோவையைச் சேர்ந்த கவுரி சாந்தினி என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.
ராமலிங்கம் மறைவுக்குப் பின்பு தெய்வானை கோகுலுடன் வசித்து வந்தார். தெய்வானைக்கு கரூர், சேலம் பைபாஸ் சாலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீக நிலம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி கோவையில் இருந்து கரூருக்கு புறப்பட்ட தன்னை ஒரு கும்பல் காரில் கடத்தி, சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாகவும், இதற்கு காரணமான நடராஜன், கருப்பண்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கோகுல் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தன்னை கடத்தி சொத்துக்களை அபகரித்ததில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கோகுல் தெரிவித்தார்.
ஆனால் இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலஜியையும், அவரது தம்பி அசோக்கையும் சேர்க்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 5ம் தேதி கரூர் ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோகுல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்கு மூலத்தில் நடராஜன் உள்ளிட்ட சிலர் என்னை கடத்தி, என் சொத்தை பறித்தனர். இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் ஆகியோரும் தான் காரணம். மேலும், செல்போனில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆசிட் ஊற்றி எரித்து விடுவேன், புதைத்து விடுவேன் என்று மிரட்டினார் என கூறியிருந்தார்.
இதனையடுத்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணிராஜ் என்பவர் இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி உள்ளிட்ட சிலரை சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த நவம்பர் 28ம் தேதி மனுவை விசாரித்த கரூர் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ராமநாதன் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா வேண்டாமா என்பதை டிசம்பர் 6ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.