இலங்கையில் சிகப்பு மழை அச்சத்தில் மக்கள்.

Monday, December 17, 2012

கொழும்பு: இலங்கையின் சில இடங்களில் விண்கல் விழுந்து பீதியைக் கிளப்பியிருக்கிறது. அதேபோல் சிகப்பு மழை தொடர்ந்து கொண்டிருக்கும் இருக்கிறது.

 சிகப்பு மழை பெய்யும் இடங்களில் நாய்கள் இறந்துபோவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
உலகம் அழியப் போகிறது என்ற பீதி அனைத்து நாடுகளையும் உலுக்கி வரும் நிலையில் இலங்கையில் விண்கல் விழுந்து பீதியை பன்மடங்காயிருக்கிறது. வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் நேற்று விண்கல் விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்ததில் பலா மரம் எரிந்துள்ளது. பளபளக்கும் தன்மையுடைய இந்த விண்கல்லினை எடுத்து வைத்திருக்கும் நபர் அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். மேலும் வந்துரம்பை என்ற இடத்தில் இன்று திங்கள்கிழமை சிகப்பு மழை பெய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காலி மத்தேகம வந்துரம்பையில் சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சிகப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் பொலநறுவை என்ற இடத்தில் இறந்து கிடந்த நாய்கள், சிகப்பு மழையினால் பலியானதாகவும் கூறப்படுகிறது.