அலைக் கற்றை, நிலக்கரி, ராணுவ தளவாட பர்சேஸில் முறைகேடு என்று பல்வேறு கோல்மால்களை வெளிக் கொண்டு வரும் சி ஏ ஜி தற்போது வைர ஏற்றுமதி செய்வதில் அரசு வங்கிகள் ரூ.500 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சில வைர ஏற்றுமதியாளர்கள் ஹாங்காங்கிற்கு வைர ஏற்றுமதி செய்வதற்காக அரசு வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாகவும், அந்த விற்பனையாளர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை எனவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. ஆனால் வங்கிகள் தனது முன் பணத்தை இழந்துள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீடுகளை சரிசெய்ய பொதுத்துறை வங்கிகள், அரசு இன்ஸுரன்ஸ் கம்பெனியான இந்திய ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகத்தை அணுகி உள்ளன. சம்பந்தப்பட்ட 13 அரசு வங்கிகளுக்கும் இன்ஸுரன்ஸ் கம்பெனிகள் 200 சதவீதம் வரை இழப்பீடு வழங்கி உள்ளன.
வங்கிகளின் இந்த செயல்பாடு அவற்றின் தணிக்கை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு துறை வங்கிகளின் தணிக்கை அறிக்கையை நேற்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்த சிஏஜி இதனை அம்பலபடுத்தி உள்ளது.
மேலும் வாடிக்கையாளர் குறித்த விபரங்களை முறையாகவும், முழுமையாகவும் பெறாமல் வங்கிகள் தங்களால் வழங்க கூடி அளவை மீறி கடன் வழங்கியதாலேயே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி அரசு வங்கிகள் செய்த அதே தவறை அரசு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகளும் எவ்வாறு செய்தது என சிஏஜி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளது. அது மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் பட்டியலையும் வங்கிகள் சமர்ப்பிக்காதது ஏன் எனவும் வினா எழுப்பி உள்ளது.
இழப்பீடு கோரும் போது இன்ஸுரன்ஸ் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தையும் சமர்ப்பிக்க வலியுறுத்த தவறி உள்ளது. 29 கேள்விகளின் அடிப்படையில் செய்யப்பட்ட தணிக்கை ஆய்வில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 26 வங்கிகளில் 9 வங்கிகள் வைர ஏற்றுமதிக்காக மட்டும் கடன் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. வங்கிகள் 4 ஏற்றுமதியாளர்களுக்கு 477 தவறையாக ரூ.519 கோடியை வழங்கி உள்ளன. இதில் ரூ.278 கோடி மட்டுமே திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறப் பட்டுள்ளது.