தங்களுக்கு சப்பாத்தி வேண்டும் என்று கோரி சேலம் மத்திய சிறையில் கைதிகள் சுவர் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
நேற்று இரவு கைதிகள் 7 பேர் சப்பாத்தி செய்யத் தேவையான பொருள்களை வைத்துக் கொண்டு சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த ஜெயிலர், உங்களுக்கு எப்படி இந்தப் பொருள்கள் கிடைத்தன என்று கூறி அவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றார்.
இதனால் பெரும் ஏமாற்றமடைந்த கைதிகள் 7 பேரும், இன்று காலை மதில் சுவர் மீது ஏறி, தங்களிடம் இருந்து பறித்துச் சென்ற பொருள்களை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.