பெங்களூரூ: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தமிழக எல்லை பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
டயர்கள் எரிப்பு : 144 தடை
பந்த் காரணமாக 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முக்கிய வீதியில் டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தண்ணீர் திறந்து விட மாட்டோம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதால் இன்று நடக்கவிருந்த அணை முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அடுத்த்கட்ட போராட்டம் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர்.
கிருஷ்ணசாகர் அணை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, மேட்டூர், நீலகிரி மாவட்டங்களில் கர்நாடக எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வர்த்தக ரீதியில் பல கோடி நஷ்டம் ஏற்படும் என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.