தீர்த்தமலை சாலையில் விவசாயிகள் சாலை மறியலில்.

Monday, December 10, 2012

அரூர் - தீர்த்தமலை செல்லும் சாலையில் இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முத்தானூரில் வயல்களுக்கு மின்சாரம் செல்லும் மின்மாற்றியில் பழுத ஏற்பட்டு ஒரு மாதம் ஆகின்றது. இது குறித்து விவசாயிகள் புகார் அளித்தனர். புகார் அளித்து 28 நாட்களுக்கு மேல் ஆகியும் பழுதை சரி செய்யாததால், பல ஏக்கர் பரப்பளில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.

இதையடுத்து தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலை போகும் சாலையில் முத்தானூர் என்ற ஊரில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழுதடைந்த மின் மோட்டார் மற்றும் கருகிக் கிடக்கும் பயிர்களை சாலையில் கொண்டு வந்து வைத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.