இன்ஸ்பெக்டருடன் உல்லாசமாக இருந்த எஸ்.ஐ.

Friday, December 28, 2012

திருச்சி: திருச்சி அருகே மண்டுகருப்பசாமி கோவில் திருவிழா பாதுகாப்புப் பணிக்குப் போன இடத்தில் இன்ஸ்பெக்டருடன் கெஸ்ட் ஹவுஸில் உல்லாசமாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானார் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர். அவரை தற்போது இடமாற்றம் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டராக இருப்பவர் 46 வயதான சகாய அன்பரசு.
அதே காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் 29 வயதான அம்பிகா. கடந்த ஆண்டுதான் சப் இன்ஸ்பெக்டர் பயிற்சிச முடிந்து சில மாதங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றார். இவருக்குத் திருமணமாகவில்லை.

காவல் நிலையப் பணியில் சேர்ந்தவுடனேயே அவரும் இன்ஸ்பெக்டர் அன்பரசுவும் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டனராம். டிசம்பர் 23ம் தேதி அம்பிகாவுக்கு, பகளவாடி என்ற இடத்தில் உள்ள மண்டுக்கருப்பச்சாமி கோவில் பாதுகாப்புப்பணி ஒதுக்கப்பட்டது. இதற்காக அங்கு அவர் முகாமிட்டிருந்தார். இந்த நிலையில் கிறிஸ்துமஸுக்காக விடுமுறையில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு, 23ம் தேதி இரவு பகளவாடி வந்தார். அங்குள்ள ஜெயராம் என்ஜீனியரிங் கல்லூரி கெஸ்ட் ஹவுஸுக்கு அவரும் அம்பிகாவும் போய் இரவு தங்கியுள்ளனர். உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் போய் விட்டனர்.

இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக டிஎஸ்பி அழகேசனுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அடுத்த நாள் அங்கு வந்த அழகேசன் விசாரணை நடத்தினார். அதில் இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் உல்லாசமாக இருந்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.பி. லலிதா லட்சுமிக்கு விசாரணை அறிக்கையை கொடுத்தார் டிஎஸ்பி அழகேசன். அதன்பேரில், அம்பிகாவை இடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார். அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.