அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும், காதல் திருமணத்திற்கு எதிராகவும் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது சந்தேகத்துக்குரியது. வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில், பாமகவுக்கு அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது ஏமாற்று அரசியலை மக்கள் நம்ப மாட்டார்கள் என சேதுராமன் தெரிவித்துள்ளார்.