காதலியை கொன்று எரித்த மதுரை வாலிபர்.

Wednesday, December 5, 2012

காத‌லி‌த்த பெ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு வ‌‌ற்புறு‌த்‌தியதா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த காதல‌ன், அவரை கழு‌த்தை நெ‌ரி‌த்து கொ‌ண்டு பெ‌ட்ரோ‌ல் ஊ‌ற்‌‌றி எ‌ரி‌த்து‌க் கொ‌ன்ற ச‌ம்பவ‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள வைகை பிரதான கால்வாயில் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு முன்பு இளம்பெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை பா‌ர்‌த்‌த திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இ‌ந்த செ‌ய்‌தி படத்துடன் பத்திரிகைகளில் வெளியானது.

இதைப் பார்த்த திருமங்கலம் அருகே உள்ள திரளி கிராமத்தை சேர்ந்த ஒச்சாத்தேவர்- சின்னம்மாள் ஆகியோர் ‌திரும‌ங்கல‌ம் காவ‌ல்‌நிலைய‌த்து‌க்கு வ‌ந்து இற‌ந்தது தனது ஒரே மக‌ள் மாரியம்மாள் (18) என்று கூறினார். அவர்கள் கூறிய அடையாளத்தை ஒப்பிட்டு பார்த்தபோது இற‌ந்தது இவ‌ர்களது மக‌ள் மாரியம்மாள் என்று உறுதியானது.

இதையடு‌த்து ‌விசாரணையை ‌தீ‌விர‌ப்படு‌த்‌திய போ‌லீசா‌ர், மாரியம்மாளுக்கும் ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவ‌‌ரிட‌ம் ஏ‌ற்ப‌ட்ட பிரச்சனையால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார் மா‌ரி‌ய‌ம்மா‌ள்.

பின்னர் கப்பலூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்த மாரியம்மாளுக்கும், கீழஉரப்பனூரை சேர்ந்த கவுதமன் (19) எ‌ன்ற வா‌லிபரு‌க்கு‌ம் இடையே காதல் மல‌ர்‌ந்தது. நெருங்கி பழகி வந்த இருவரு‌க்கு‌ம் இடையே ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்சனை காரணமாக மா‌ரிய‌ம்மாளை கவுதம‌‌ன் கொலை செ‌ய்‌திரு‌க்கலா‌ம் எ‌ன்ற கோண‌த்த‌ி‌ல் போ‌லீசா‌ர் ‌‌விசா‌ரி‌க்க தொட‌ங்‌கின‌ர்.

இதையடு‌த்து காதல‌ன் கவுதமனை போ‌லீசா‌ர் தேடி வ‌ந்த ‌நிலை‌யி‌ல், கவுதமன் வருவாய் ஆய்வாளர் முன்பு சரண் அடைந்தார். அவரை கைது செ‌ய்த போ‌‌‌லீசா‌‌ரி‌ட‌ம், மாரியம்மாளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மாரியம்மாளுக்கும், கவுதமனு‌க்கு‌ம் நீண்ட நாட்களாக காதல் இருந்து‌ள்ளது. திடீரென்று ஒருநாள் தன்னை திருமணம்செய்து கொள்ளும்படி மா‌ரிய‌ம்மா‌‌ள் வற்புறுத்தியு‌ள்ளா‌ர். இதனா‌ல் உஷா‌ர் அடை‌ந்த கவுதம‌ன், மா‌ரிய‌ம்மாளை ப‌ற்‌றி விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்தது.

இதனா‌ல் திருமணத்துக்கு கவுதம‌ன் மறுத்துவிட்டா‌ர். ஆனாலு‌ம் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு மா‌ரிய‌ம்மா‌ள் வலியுறுத்தியதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டா‌ர் கவுதம‌ன். சம்பவத்தன்று வைகை பிரதான கால்வாய் பகுதிக்கு அழைத்துசென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மாரியம்மாளை கொலை செய்தா‌ர். பின்னர் கொலையை மறைக்க பிணத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ‌வி‌ட்டதாக காவ‌ல்துறை‌யி‌ல் வா‌க்குமூல‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர் கவுதம‌ன்.

த‌ற்போது மதுரை ‌சிறை‌யி‌ல் க‌ம்‌பி எ‌ண்‌ணி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர் மதுரை‌க்கார‌ர் வா‌லிப‌ர் கவுதம‌ன்.