கர்நாடக அரசைக் கண்டித்து இர‌யி‌ல் ம‌றிய‌ல்- விவசா‌யிக‌ள் கைது.

Friday, December 7, 2012

கர்நாடக அரசைக் கண்டித்து ‌த‌ஞ்சை, நாகை, ‌திருவாரூ‌ர் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இர‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட நூ‌ற்று‌க்கண‌க்கான ‌விவசா‌யிக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

திருச்சியில் இருந்து த‌ஞ்சாவூ‌ர் இர‌யி‌ல் ‌நிலைய‌‌த்து‌க்கு காலை 11 ம‌ணி‌க்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் இரயிலை ம‌றி‌த்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடு‌த்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

போதிய தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க அனைத்து தரப்பினரையும் விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் வணிகர்கள் ஆதரவு தெரிவித்து இப்பகுதிகளில் கடைகள் அடைகப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, தஞ்சையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இன்று விடுமுறை அறிவித்துள்ளது.