காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் திறந்து விட கோரி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு ஏற்கவில்லை என கூறி வழக்கறிஞர்கள் புதுச்சேரியில் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு புதுச்சேரி வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்,புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டதின் போது வலியுறுத்தப்பட்டன.