நா‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த்து‌க்கு புதிய கார் பரிசு.

Friday, December 14, 2012

அ.தி.மு.க. கொ‌ள்கை பர‌ப்பு துணை‌ செயலாள‌ர் நா‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த்து‌க்கு முத‌ல்வரு‌ம், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலருமான ஜெயல‌லிதா, இ‌ன்னோவா கா‌ர் வழ‌ங்‌கி கவுரவ‌ப்படு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ம.தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோவுட‌ன் ஏ‌ற்ப‌ட்ட கரு‌த்து வேறுபாடு காரணமாக அ‌ண்மை‌யி‌ல் அ‌க்க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌கி அ.‌தி.மு.க.‌வி‌ல் இணை‌ந்தா‌ர்.

அ.த‌ி.மு.க.‌வி‌ல் இணை‌ந்த அடு‌த்த ‌நி‌மிடமே நா‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த்தை க‌ட்‌சி‌யி‌ன் கொ‌ள்ளை பர‌ப்பு துணை செயலாளரான ‌நிய‌மி‌த்தா‌‌ர் ஜெயல‌‌‌லிதா.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், நாஞ்சில் சம்பத்துக்கு க‌ட்‌சி‌ப் பணியாற்றுவதற்கு ஏதுவாக புதிய இன்னோவா கார் ஒன்றை முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா இ‌ன்று க‌ட்‌சி அலுவலக‌த்த‌ி‌ல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.