தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை சம்பவம் இருவர் கைது.

Saturday, December 22, 2012

பள்ளி மாணவியை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் தாதன்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மகள் புனிதா.இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அவரது சடலம் நேற்று காலை ரயில்வே பாலம் அருகில் இருக்கும் முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிரேதத்தை கைப்பற்றி செய்துங்கநல்லூர் போலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவியை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.