"விக்கி லீக்ஸ்" இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே அனைத்து நாடுகளையும் பாதிக்கும் சுமார் 10 லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிடப்போவதாக ஈக்வடார் தூதரக பால்கனியிலிருந்து அறிவிக்க அவரது ஆதரவாளர்கள் கையசைத்து ஆரவாரம் செய்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஈகு வேடார் தூதரகம் முன்பு ஏராளமானவர்கள் கூடினர். தூதரகத்தில் உள்ள பால்கனியில் தோன்றிய ஜுலியன் அசாங்கே தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். பின்னர் அவர்களிடம் பேசிய அவர், கற்பழிப்பு வழக்கில் என்னை சுவீடனுக்கு அனுப்ப இங்கிலாந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.
அது குறித்து பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். ஏற்கனவே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்கள் விக்கி லீக் வெளியிட்டது. அது போன்று அடுத்த ஆண்டில் (2013) உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம். அதில் சிரியா உள்பட பல நாட்டு ரகசியங்களும் அடங்கும் என்றார். அவரது இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் விக்கி லீக்ஸை 'ஆன் கோயிங் கிரைம்' என்று வர்ணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"வெள்ளை மாளிகையில் உண்மையான ஜனநாயகம் இல்லை, கான்பராவிலும் இல்லை. மக்களிடமே உண்மை என்ற ஆயுதம் உள்ளது" என்றார் அசாங்கே.