பிரபு மற்றும் பாரதி சுட்டுக் கொன்ற வழக்கு-சி.பி.ஐ க்கு மாற்றம்.

Wednesday, December 12, 2012

கொலையாளிகள் என கைதுசெய்யப்பட்டிருந்த பிரபு மற்றும் பாரதியை நவம்பர் 30 ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் திட்டமிட்டு வெள்ளைத்துரையும், சப் – இன்ஸ்பெக்டரும் சுட்டுக் கொண்டனர்.


வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு :

போலிசாரால் பிரபு, பாரதி ஆகியோர் சுட்டு படுகொலை செய்யப்பட்டது மனித உரிமைகளுக்கு எதிரானதென்று வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர் . இந்நிலையில் உள்துறை செயலர் (ஹோம் செக்ரட்ரி ) , டி .ஜி.பி,ராமானுஜம், மற்றும் வெள்ளைத்துரை ஆகியோர் பதில் மனு அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு சி.பி.ஐ’கு மாற்றம் :


மேற்கண்ட வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற மனுவில் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கினை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.
கொலைவழக்கில் டி.எஸ்.பி வெள்ளைத்துரை?:

மேலும் டி.எஸ்.பி வெள்ளைத்துரை மீது கொலைவழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


                                                                                                                                    courtsy-devartv