வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை.

Thursday, December 13, 2012

வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதா‌ல் வரு‌ம் 16ஆ‌ம் தேதி முதல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாட்டங்களில் மழை பெய்யும் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததா‌ல் காவிரி டெல்டா விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த நிலை உருவாகியிரு‌ப்பதாக சென்னை வானிலை மையம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மேற்கு நோக்கி நகர்ந்து வருவதா‌ல் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எ‌ன்று‌ம் வரும் 16ஆ‌ம் தேதி முதல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாட்டங்களில் மழை பெய்யும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.