தேவர்குல கூட்டமைப்பின் நிறுவனர் சண்முகையா பாண்டியன் கைது !

Tuesday, November 20, 2012

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சமீபத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாத தால் பலரும் பாதிக்கப்பட்டனர். அங்கு மேலும் பதற்றமான நிலை ஏற்படாமல் இருக்க போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்ததுடன் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேவர்குல கூட்டமைப்பு சார்பில் சாயல்குடி பகுதியில் பிரசார கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தேவர்குல கூட்டமைப்பின் நிறுவனர் சண்முகையா பாண்டியன் பிரசார கூட்டம் நடத்த சென்றார். இதனை தொடர்ந்து சாயல்குடி அருகே உள்ள கரிசல்குளம் பகுதியில் அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.