காதலுக்கு எதிர்ப்பு : அம்பத்தூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை !

Tuesday, November 20, 2012

சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பாலரதி (17). அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த பலரதிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இது குறித்து அறிந்த பெற்றோர் பாலரதியை கண்டித்துள்ளார்கள். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உயிருக்குப் போராடிய அவரை மீட்டு அவரது பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இது பற்றி அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.