சேலத்தில் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய இடங்களில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சேலம் மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஏற்கெனவே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்க்ம் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக திருப்பூர் எஸ்.பி,. நாமக்கல் எஸ்.பி ஆகியோரும் சேலம் வந்துள்ளனர். இவர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து 400 போலீஸார் கூடுதல் பாதுகாப்புக்காக வருகை தந்துள்ளனர். தற்போது மொத்தம் 600 போலீஸார் சேலம் மற்றும் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணி முதல் சேலம் மாவட்டத்தில் கிராமப் புறங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப் படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் 4 அல்லது 5 பேருந்துகளாகச் சேர்ந்து, ஒன்றுபோல் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று சேலம் போலீசார் தெரிவித்தனர்.