டெக்சாஸ் பகுதியில் பயங்கர விபத்து

Saturday, November 24, 2012

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பகுதியில் இன்று அதிகாலையில் கடுமையாக மூடுபனி கொட்டியது. இதன் காரணமாக அங்குள்ள மேற்கு பிவுமாண்ட் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன், ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

சுமார் 150 வாகனங்கள் மோதிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். பல மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இந்த விபத்தில் 2 பேர் செத்தனர். இவர்களது உடல்கள் டிராக்டருக்கு அடியில் கிடந்ததை கண்டுபிடித்து போலீசார் மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 120 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.