செ‌ன்னை ராய‌பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள எ‌க்‌ஸ்‌பிர‌ஸ் அவெ‌ன்யூ‌வி‌ல் தீ விபத்து !

Friday, November 23, 2012

செ‌ன்னை ராய‌பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள எ‌க்‌ஸ்‌பிர‌ஸ் அவெ‌ன்யூ‌வி‌ல் இ‌ன்று காலை ஏ‌ற்ப‌ட்ட ‌தீ ‌விப‌த்‌தி‌ல் 5‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடைக‌ள் ‌தீ‌யி‌ல் கரு‌கியது. இதனா‌ல் அ‌ங்‌கிரு‌ந்த கடைக‌ள், ‌தியே‌ட்ட‌ர் உடனடியாக மூட‌ப்ப‌ட்டது.

ராய‌ப்பே‌ட்டை‌யி‌ல் பல மா‌டி கொ‌ண்ட 'எ‌க்‌ஸ்‌பிர‌ஸ் அவெ‌ன்யூ‌வ்' எ‌ன்ற பெய‌ரி‌ல் வ‌ணிக வளாக‌ம் செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது. இ‌ந்த வ‌ணிக வளாக‌த்‌தி‌ல் முத‌ல் மாடி‌யி‌ல் உ‌ள்ள செரு‌ப்பு கடை‌யி‌ல் ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

‌தீ மளமளவென பர‌வி அரு‌கி‌ல் உ‌ள்ள கடைகளு‌க்கு பர‌வியது. தக‌வ‌ல் அ‌றி‌ந்து ‌4 ‌தீயணை‌ப்பு வ‌ண்டிக‌ளி‌ல் ‌வீர‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து ‌தீயை அணை‌க்க முய‌ன்றன‌ர்.

ஆனா‌ல் ‌‌தீ கொழு‌ந்து‌வி‌ட்டு எ‌ரி‌ந்ததா‌ல் மேலு‌ம் 4 கடைகளு‌க்கு ‌தீ பர‌வியது. இதை‌த் தொட‌ர்‌ந்து அ‌ங்‌கிரு‌ந்த கடைக‌ள், ‌தியே‌ட்ட‌ர்க‌ள் மூட‌ப்ப‌ட்டது. இதையடு‌த்து அ‌‌ங்‌கிரு‌ந்த ஊ‌‌ழிய‌ர்க‌ள் உடனடியாக வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர்.

சுமா‌ர் ஒரு ம‌ணி நேர‌ம் போராடி ‌தீயணை‌ப்பு ‌வீர‌ர்க‌ள் ‌தீயை அணை‌த்தன‌ர். இ‌ந்த ‌தீ ‌விப‌த்தா‌ல் உ‌யி‌ர் சேத‌ம் எதுவு‌‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை.