கல்விக்கடன் கிடைக்காததால் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை

Monday, November 26, 2012

விண்ணப்பித்து 5 மாதங்களுக்கு மேலாகியும் கல்விக்கடன் கிடைக்காததால் திருப்பூரில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னத்தூர், தேவாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் கோவைக்கு அருகில் உள்ள நீலாம்பூரில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்விக்கடனுக்காக குன்னத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், கடன் தராமல் வங்கி நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்திருக்கிறார். கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் கடந்த சில நாட்களாக கல்லூரிக்குச் செல்வதையும் தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், கடந்த புதன்கிழமை வங்கிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வங்கிக் கடன் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே தமது மகனின் தற்கொலைக்கு காரணம் என்று சண்முகசுந்தரத்தின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளா