சீனா தனது கடற்படையில் புதிதாக இணைத்து கொண்டுள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல் !

Monday, November 26, 2012

சீனா தனது கடற்படையில் புதிதாக இணைத்து கொண்டுள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல் ஒன்றில், போர் விமானம் ஒன்றை முதல் முறையாக தரையிறக்கி உள்ளது.

இந்த தகவலை அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு உள்ள வலுவை எடுத்துக்காட்டுவது போன்று உள்ளதாக கருதப்படுகிறது.

ஜே-15 ஜெட் என்ற போர் விமானத்தை சீன விமானிகள் நேற்று லையோனிங் விமானம் தாங்கி கப்பலின் மீது வெற்றிகரமாக தரையிறக்கினர்.

சீனாவின் இந்த முயற்சி ஆசிய நாடுகளுக்கு மு‌க்‌கியமாக ஜப்பானுக்கு அமைதியின்மையை உருவாக்கக்கூடும் என கூறப்படுகிறத