அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் !

Tuesday, November 27, 2012

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 4.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் தீவுப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது.

இன்று காலை 4.44 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த சில நொடிகளில் மக்கள் வீட்டை விட்டு ஓடி வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.