இலங்கையில் தொழிற்சாலை அமைக்கும் இந்தியா !

Friday, November 9, 2012

இந்தியா, பாரிய சீனித் தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமைந்துள்ள முதலீட்டு வலயத்தில் அமைக்கவுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது
. இது தொடர்பில் 220 மில்லியன் டாலர்கள் முதலீட்டு திட்டம் ஒன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமாகி உள்ளது .

 இந்த தொழிற்சாலையில் சீனிக்கான மூலப்பொருள் தருவிக்கப்பட்டு சீனி உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன்மூலம் ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 2000 டன் சீனியை உற்பத்தி செய்யமுடியும். பின்னர் அது 3,000 டன்களாக அதிகரிக்கப்படும். அம்பாந்தோட்டையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை சமநிலைப்படுத்துதற்காகவே இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.