பிரதீபா காவேரி கப்பலில் இருந்து குதித்து 6 மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதீபா காவேரி கப்பலில் இருந்து குதித்து உயிரிழந்த ஆனந்த், நிரஞ்சன் ஆகிய மாலுமிகளின் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, பிரதீபா காவேரி கப்பல் குறித்து பதில் அளிக்குமாறு கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும், 6 ஊழியர்கள் பலியானது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சென்னை காவல்துறை ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பிரதிபா காவேரி கப்பலை சென்னை கடல் எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்லக் கூடாது என்றும், அவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், முன்பணமாக ரூ.6 கோடியை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அடுத்த கட்ட விசாரணைக்கு, கப்பல் நிறுவன அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்து வர வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.