தேமுதிக விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன் றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாரை அவதூறாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று விஜயகாந்த் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ரூ.1 லட்சம் ரொக்கப் பிணையில் விஜயகாந்துக்கு முன் ஜாமீன் தரலாம் என நீதிபதி கூறினார்
ரூ.1 லட்சம் ரொக்கப் பிணையில் விஜயகாந்துக்கு முன் ஜாமீன் தரலாம் என நீதிபதி கூறினார்
அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவத்தார். 'விஜயகாந்த் மற்றவர்களை அடிப்பதை வழக்கமாக கொண்டவர்' என அவர் வாதம் செய்தார். மேலும் 'தன் கட்சி வேட்பாளரையே தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் அடித்துள்ளார்' என்று வாதிட்டார்.