புய‌லி‌ல் மாயமான க‌ப்ப‌ல் ஊ‌ழிய‌ர்க‌ள் 2 பே‌ர் சடலமாக ‌மீ‌ட்பு

Friday, November 2, 2012

சென்னையில் தரைதட்டிய கப்பலில் பணியாற்றிய மேலும் இர‌ண்டு ஊழியரின் சடல‌ங்க‌ள் இ‌ன்று காலை ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மேலு‌ம் 3 பே‌ரி‌ன் க‌தி எ‌ன்ன எ‌ன்று இதுவரை தெ‌ரிய‌வி‌ல்லை.

செ‌ன்னை துறைமுக‌த்‌தி‌ல் இரு‌ந்து ஆறரை ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தூர‌த்‌தி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்ட ‘பிரதீபா காவேரி’ என்ற சரக்கு கப்பல் ‌நீல‌ம் புய‌லி‌ல் சிக்கியது.

சென்னை பெசன்ட்நகரில் பிரம்ம ஞானசபைக்கு பின்புறம் எலியட்ஸ் கடற்கரை அருகே கடலில் தரைதட்டி க‌ப்ப‌ல் நின்றது. கப்பல் தரை தட்டியதும், அதில் இருந்த 37 ஊழியர்களில் 21 பேர் உயிர் தப்புவதற்காக கப்பலில் உள்ள உயிர் காக்கும் 3 சிறிய படகுகள் மூலம் கரைக்கு செல்ல முயன்றனர்.

அவர்கள் கரையை நோக்கி வந்த போது காற்று பலமாக வீசியதால் படகுகள் திடீரென கவிழ்ந்தன. இதனால் அவர்கள் கடல் நீரில் விழுந்து தத்தளித்தனர். இதை கரையில் இருந்து பார்த்த மீனவர்கள் படகுகளில் சென்று கடலில் தத்தளித்தவர்களில் 15 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

உடனடியாக அவர்கள் சென்னை அடையாறில் உள்ள தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த் மோகன்தாஸ் என்ற ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

படகுகள் மூலம் தப்ப முயன்று கடலில் விழுந்தவர்களில் 5 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியாம‌ல் இரு‌ந்தது. அவர்களை கடற்படை, கடலோர காவல்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் மூலம் தேடி கண்டுபிடிக்கும் முயற்சி முடுக்கி விடப்பட்டிரு‌ந்தன‌ர்.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் செ‌ன்னை நே‌ப்‌பிய‌ர் பால‌ம் அருகே ‌க‌ப்ப‌ல் ஊ‌ழிய‌‌ர்க‌ள் இர‌ண்டு ப‌ே‌ரி‌ன் உட‌ல் ‌மீ‌ட்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ம‌ற்ற 3 பே‌ரி‌ன் க‌தி எ‌ன்ன எ‌ன்று இதுவரை தெ‌ரிய‌வி‌ல்லை. அவ‌ர்களை தேடு‌ம் ப‌ணி ‌‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.