புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்ற உத்திர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளிடம் உள்ளதால் மத்திய அரசு பிரபலமான அரசாக மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை. மத்திய அரசை ஆதரிக்கும்
இன்னொரு கட்சி (பகுஜன் சமாஜ்) எங்கள் மாநிலத்தில் இருக்கிறது. அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து, இந்த மேடையில் இருந்தபடியே நான் முடிவெடுக்க முடியாது. பாராளுமன்றத்தில் முடிவெடுப்பேன்.
5 ஆண்டுகள் உத்திரபிரதேசத்தை ஆள்வதற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனது பதவி காலத்தின் 6வது மாதத்திலேயே என் ஆட்சியைப் பற்றி எடைபோட்டு தீர்ப்பு கூறுவது நியாயமற்ற செயலாகும். நம் நாட்டில் நடைபெற்று வரும் ஊழல்களை குறைக்க முடியுமே ஒழிய, அறவே ஒழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.