ராகுல் காந்தி மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு !

Saturday, November 17, 2012

டெல்லி: மக்களவைத் தேர்தலின் போது தமது சொத்து பற்றி தவறான தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில், அசோசியேட் ஜேர்னல் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பதை மறைத்திருக்கிறார் என்பது சுப்பிரமணிய சுவாமியின் புகார்.

இப்புகார் மீது விசாரணை நடத்துமாறு அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியின் விசாரணைக்கு தலைமை தேர்தல் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் ஆர்.கே. ஸ்ரீவத்சவா இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.