காட்பாடி விருதம்பட்டை சேர்ந்தவர் நீலசந்திரகுமார் (வயது 38). விடுதலை சிறுத்தை கட்சியின் வேலூர் மாநகர மாவட்ட செயலாளராக உள்ளார். ஜோலார்பேட்டையை சேர்ந்த குமனன் என்பவர் தனது மகனுக்கு வேலைவாங்கி கொடுக்க நீலசந்திரகுமாரிடம் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை.
பணத்தை திருப்பி கேட்டபோது நீலசந்திரகுமார் கத்தியைகாட்டி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து விருதம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நீலசந்திரகுமாரை கைது செய்தனர். இந்நிலையில் வேலைவாங்கி தராமல் மோசடி செய்ததாக மற்றொரு பிரிவில் நீலசந்திரகுமார் மீது மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் நீலசந்திர குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், கலெக்டர் சங்கருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவுபடி நீலசந்திரகுமார் குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சிறையில் உள்ள அவரிடம் இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.