காதல் பிரச்னையால் தர்மபுரியில் கலவரம் !

Thursday, November 8, 2012

காதல் பிரச்னையால் தர்மபுரியில் ஏற்பட்ட கலவரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தர்மபுரி நாயக்கின் கொட்டாய் நத்தம் காலணியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இளவரசனும், பக்கத்து கிராமமான கோணங்கி நாயக்கின் ஹள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனால், திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, நத்தம் காலணியில் உள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தினர்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலாகின. மேலும், இருச் சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், திருப்பத்தூர் செல்லும் சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு, தீயிட்டு கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.