இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி வருகிறது.
இது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் எழுவது உண்டு.
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் சீனாவுக்கு சுற்றுலா செல்வதற்கு விசா கோரி விண்ணப்பித்தால் அதற்கு சீனா தரப்பிலிருந்து அனுமதி தரப்படுவது இல்லை.
சமீபகாலமாக இந்த எல்லை பிரச்னை அதிகமாக பேசப்படாத நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது.
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கடவுச்சீட்டில் அருணாச்சல பிரதேச மாநிலமும் காஷ்மீரின் லடாக்கில் உள்ள அக்சய் சின் என்ற பகுதியும் சீன எல்லைக்குள் இருப்பது போன்ற வரைபடம் இடம் பெற்றுள்ளது.
பதிலுக்கு இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் கடவுச்சீட்டில் இந்த இரண்டு பகுதிகளும் இந்திய எல்லைக்குள் இருக்கும் வரை படங்களின் முத்திரையை குத்துகின்றனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.