காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது

Monday, November 26, 2012

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரியில் வேகமாகக் காற்று வீசுவதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரியில் மழை பெய்யாவிட்டாலும், பலத்த காற்று வீசுவதால், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட 3 மடங்குக்கு மேல் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், குமரியில் இரவு நேர மின் வெட்டு நேற்று ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.