பேர் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி மனு !

Friday, November 2, 2012


தேவர் குரு பூஜைக்குச் சென்ற 3 பேர் பரமக்குடி அருகே கொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பொதுநல வழக்கு மையச் செயலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு விவரம்:
தேவர் குரு பூஜைக்குச் சென்ற 3 பேர் அக்.30-ம் தேதி பரமக்குடி அருகே கொலை செய்யப்பட்டனர். மேலும் விழாவுக்குச் சென்று திரும்பியவர்கள் கார் மீது மதுரை வட்டச் சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 17 பேர் தீக்காயமுற்றனர்.

இச்சம்பவங்கள் குறித்து உண்மையை அறிய இது தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.