ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை முகமூடி அணிந்த 20 பேர் கொண்ட கும்பல் நகரின் பிரதான சாலையில் புகுந்து கடைகளை அடித்து நொறுக்கியது. இதனால், அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் விசாரணை நடத்தி சின்னக்கடைத் தெருவில் 8 பேர், ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த 5 பேர் உள்பட 13 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் நகரின் பிரதானப் பகுதியான சாலைத் தெருவில் திடீரென 20 பேர் கொண்ட கும்பல் அடையாளம் தெரியாதவாறு முகத்தை மூடிக் கொண்டு, கம்புகளுடன் வந்து அந்தப் பகுதியில் கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும், கார்கள், ஆட்டோக்களை சேதப்படுத்தினர். இதனால், மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பள்ளிகள்,கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. போலீஸார் குவிக்கப்பட்டனர்