புதுடெல்லியில் நேற்று முன்தினம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களை சந்தித்து, ரிலையன்ஸ் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிருபர்களின் கேள்விகளுக்கும் கெஜ்ரிவால் பதில் அளித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த முன்னாள் காங்கிரஸ் தொண்டர் ஜெகதீஷ் சர்மா என்பவர் எழுந்து, அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன்? என்று கெஜ்ரிவாலை நோக்கி ஆவேசமாக பேசினார்.
மேலும் இந்திய வருவாய் அதிகாரியான அவர் ஏன் டெல்லியை விட்டு மற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி கெஜ்ரிவால் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.
ஆனால் 3 இளைஞர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டனர். அதில் ஒருவர் திடீரென தனது ஷூவை கழற்றி கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். அதனை கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் தடுத்துவிட்டனர்.
விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு எதிராக பேசியவர் சோனியா காந்தியின் குடும்ப நண்பர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களை ஊழலுக்கு எதிரான இந்தியா இன்று வெளியிட்டது.
அதில் ஒரு புகைப்படத்தில், சோனியா காந்தியுடன் ஜெகதீஷ் சர்மா அமர்ந்துள்ளார். மற்றொரு படத்தில் வதேராவுடன் பேசிக் கொண்டிருப்பது போன்று உள்ளது.
பரூக்காபாத்தில் குர்ஷித் தனது ஆதரவாளர்களை அனுப்பி எங்கள் கூட்டத்திற்கு இடையூறு செய்ததுபோல், அவர் லெவலுக்கு நேரு-காந்தி குடும்பம் இறங்கி வந்துள்ளதா? என்று ஊழலுக்கு எதிரான இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.