வேலம்மா‌ள் பொ‌றி‌‌யிய‌ல் க‌ல்லூ‌ரி மாணவ‌ர் அடி‌த்து‌ கொலை ?- த‌ந்தை புகா‌ர்

Monday, November 26, 2012

செ‌ன்னை வேல‌ம்மா‌ள் பொ‌றி‌‌யிய‌ல் க‌ல்லூ‌ரி மாணவ‌ர் அடி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக அவரது த‌ந்தை புகா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வேல‌ம்பா‌ள் பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் ‌பி.இ. இர‌ண்டா‌‌ம் ஆ‌ண்டு படி‌த்து வ‌ந்தவ‌ர் சரவண‌ன். இவ‌ர் கட‌ந்த ஆ‌ண்டு ம‌ர்மமான முறை‌யி‌ல் க‌ல்லூ‌ரி ‌விடு‌தி‌யி‌ல் இற‌ந்து ‌கிட‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தனது மக‌ன் அடி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக அவரது த‌ந்தை பொ‌ன்னுசா‌மி அ‌ப்போது புகா‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர். ஆனா‌ல், க‌ல்லூ‌ரி ‌நி‌ர்வாகமோ, மாணவ‌ன் சரவண‌ன் மாரடை‌ப்பா‌ல் உ‌யி‌ரிழ‌ந்ததாக தெ‌ரி‌வி‌த்தது.

மாணவ‌ன் இற‌ந்தது தொட‌ர்பாக ‌சி.‌பி.‌சி.ஐ.டி‌ ‌விசாரணை நட‌த்‌தியது. ஆனா‌ல் ஓரா‌ண்டு ஆ‌கியு‌ம் ‌சி.‌பி.‌சி.ஐ.டி‌ ‌விசாரணை‌யி‌ல் இதுவரை எ‌ந்த நடவ‌டி‌க்கையு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை.

இத‌னிடையே, மாணவ‌ன் சரவண‌ன் அடி‌‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக உடலை ப‌ரிசோதனை செ‌ய்த டா‌க்ட‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மக‌ன் சாவு‌க்கு காரணமானவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க கோ‌ரி அவரது பொ‌ன்னுசா‌மி முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு புகா‌ர் மனு அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.