டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத குழந்தை உட்பட நான்கு பேர் பலி !

Monday, November 26, 2012

மேலூர்: டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு 5 மாத குழந்தை உட்பட நான்கு பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் 19 வயது மகள் ரேவதி மர்மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று காலை ரேவதி உயிரிழந்தார். அவரின் மரணத்திற்குக் காரணம் மேலூர் அரசு மருத்துவமனையின் அலட்சியமே என்று ரேவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேபோல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மேலூர் மூவேந்தர் நகரைச் சேர்ந்த திணேஷ் என்பவரது 5 மாத குழந்தையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுமி இன்று காலையில் உயிரிழந்தார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்மணியும் இன்று மரணமடைந்தார். ஒரே நாளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தாக்கி 4 பேர் மரணமடைந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது