நவம்வர் 26- நேற்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை உலகம் முழுக்க கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சேலத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சிலர் அனைமேட்டில் உள்ள மாணவர்கள் விடுதி முன் திரண்டு பெரிய பிரபாகரன் படத்தை வைத்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.
பின்னர் பிரபாகரனின் பெயர் பொறித்த கேக்கை கொண்டு வந்து “பிரபாகரன் வாழ்க”, “பிரபாகரன் வாழ்க” என முழக்கமிட்டமிட்டபடி கேக் வெட்டி கொண்டாடினர். அந்த வழியாக வரும் அனைத்து மக்களுக்கும் கேக், மிட்டாய், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
“'பிரபாகரன் எம் தமிழினத்தின் அடையாளம்... ஒரு தமிழனாக எங்கள் இன அடையாளத்தின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம்”. “தனி ஈழம் மட்டுமே அங்கு தீர்வு ஐ.நா மன்றம் தலையிட்டு தனி ஈழம் அமைய உதவ வேண்டும்” என பிரபாகரன் பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்த வழக்கறிஞர் பார்த்திபன் தெரிவித்து்ளளார்.
பின்னர் அனைவரும்
“தம்பி தம்பி தம்பி
உலக தமிழர்கள் உன்னை நம்பி.....
நீ தானே எங்கள் தலைவன்
நாங்களெல்லாம் உங்கள் தொண்டன்
பறக்கும் பறக்கும் பறக்கும்
உலக அரங்கத்தில்
தமிழீழ கொடி பறக்கும்
நீர் இல்லாமல் உயிரில்லை
நீ இல்லாமல் எம்மினமில்லை
உன் திசை காட்டிய வழியில்....
தனி ஈழம் அமையும்....'
என பாடல் பாடி பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடினர்.
தமிழீழ தேசியத் தலைவரின் 58வது பிறந்தநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தமிழகத்தில் தேசிய தலைவரின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பதாதைகளும், சுவரொட்டிகளும் காணப்பட்டண. தமிழ் உணவாளர்களின் வீடுகளில் தலைவருக்கு ஆசிவேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்ட்துடன் அகவணக்கம், உறுதி உரை எடுத்தனர்.
அதன் பின்பு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இன் நிகழ்வில் குழந்தைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்