இந்தோனேசியாவில் நிலநடுக்கம் !

Wednesday, November 28, 2012

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக
பதிவாகியிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை.