மீண்டும் ஐ‌.மு‌.கூட்டணி ஆட்சியை பிடிக்கும்-மத்திய அமைச்சரின் காமெடி !

Saturday, November 17, 2012

2014ஆ‌ம் ஆ‌ண்டு மே வரை எ‌ங்களது ஆ‌ட்‌சி‌ இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அத‌ன் ‌பிறகு‌ மறுபடியு‌ம் ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்‌ட‌ணி ஆ‌ட்‌‌சி வரு‌ம் எ‌ன்று‌ம் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் நாராயணசா‌‌மி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சியபோது இ‌வ்வாறு தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

2‌‌‌‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ‌விவகார‌த்‌தி‌ல் தவறான தகவலை பர‌ப்‌பிய பா.ஜ.க. ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று‌ம் நாராயணசா‌மி கூ‌றினா‌ர்.

அதாவது ம‌க்களை ‌திசை‌திரு‌ப்‌பி ஒரு லட்ச‌த்து 76 கோடி ரூபா‌ய் ந‌ஷ்ட‌ம் ஏ‌ற்ப‌ட்டது எ‌ன்று ம‌க்க‌ள் ம‌த்த‌ி‌யி‌ல் பா.ஜ.க கூ‌றியது எ‌ன்று‌ம் இ‌ப்போது ரூ.9400 கோடி வ‌ந்‌திரு‌க்கு‌ம் காரண‌த்‌தினா‌ல் பா.ஜ.க இ‌ப்போது ம‌க்களு‌க்கு ப‌தி‌ல் சொ‌ல்ல வ‌ே‌‌ண்டிய ‌நிலை‌யி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்று‌‌ம் நாராயணசா‌மி கூ‌றினா‌ர்.

நாடாளும‌ன்ற மழை கால கூ‌ட்ட‌த் தொட‌ர் சுமுகமாக நடைபெறு‌ம் எ‌ன்று கூ‌றிய நாராயணசா‌மி, 2014ஆ‌ம் ஆ‌ண்டு மே வரை எ‌ங்களது ஆ‌ட்‌சி‌ இரு‌க்கு‌ம், அத‌ன் ‌பிறகு‌ மறுபடியு‌ம் ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்‌ட‌ணி ஆ‌ட்‌‌சி வரு‌ம் எ‌ன்றா‌‌ர்.